இது தாங்க கடிச்சது… மருத்துவமனைக்கு பாம்புடன் வந்து அதிர்ச்சி கொடுத்த வாலிபர்!

இது தாங்க கடிச்சது… மருத்துவமனைக்கு பாம்புடன் வந்து அதிர்ச்சி கொடுத்த வாலிபர்!
விஷப்பாம்பு

திண்டுக்கல் அருகே தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்ணை விஷப் பாம்பு கடித்த நிலையில், கடித்த பாம்பை வாலிபர் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் அருகில் உள்ள எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியக்காள்(50). கூலி வேலை பார்த்து வரும் இவர் தோட்டத்து வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று வடமதுரை அருகே உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

தோட்டப் பணியில் இருந்த அவரை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. பயத்தில் அலறியவரைக் கண்ட அருகில் இருந்த சக தொழிலாளர்கள் பெரியக்காளை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இச்சூழலில், அவருடன் வந்த வாலிபர் ஒருவர் கடித்த விஷப்பாம்பையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். பாம்பைக் கண்ட நோயாளிகள் பயந்ததால். அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து, பெரியக்காளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து அந்த வாலிபர் கூறுகையில், "கடித்த பாம்பின் வகை தெரிந்தால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும். எனவே, பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து வந்தேன்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in