பாரத் ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பை மீறிய நபர்: ராகுல் காந்தியைக் கட்டிப்பிடிக்க முயன்றதால் பரபரப்பு

பாரத் ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பை மீறிய நபர்: ராகுல் காந்தியைக் கட்டிப்பிடிக்க முயன்றதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தியின் பாதுகாப்பை மீறி, அவரை ஒரு நபர் கட்டிப்பிடிக்க முயன்றார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை ஹோஷியார்பூரில் நடைபெற்றுவருகிறது. இந்த நடைபயணத்தின் போது பாதுகாப்பினை மீறி, மஞ்சள் நிற உடை அணிந்த ஒருவர் ராகுல் காந்தியை நோக்கி வந்து அவரை கட்டிப்பிடிக்க முயன்றார். அப்போது ராகுல் காந்திக்கு அருகில் நின்றிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அந்த நபரை தள்ளிவிட்டனர்.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்திக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஹோஷியார்பூரில் பாரத் ஜோடோ யாத்திரைபோது பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங், ஹரிஷ் சவுத்ரி மற்றும் ராஜ் குமார் சப்பேவால் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in