
முதியவர் ஒருவரை வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் இழுத்துச் செல்லும் கொடூர வீடியோ காட்சி வெளியாகி அனைவரையும் பதறவைத்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு மகாடி சாலையில் ஸ்கூட்டரில் பின்னால் முதியவர் ஒருவரை வாலிபர் ஒருவர் இழுத்துச் செல்லும் காட்சி வெளியாகி இருக்கிறது. முதியவர் இழுத்துச் செல்லப்படும்போது அந்த சாலையில் வந்த பொதுமக்கள் தங்கள் வாகனத்தில் விரைந்து சென்று அந்த ஸ்கூட்டரை வழிமறித்தனர். பின்னர் அந்த வாலிபரை அவர்கள் தட்டிக்கேட்டனர். ஆனால் எதைப் பற்றியும் அந்த வாலிபர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட முதியவர் தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதியவரை ஸ்கூட்டரில் முதியவரை இழுத்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முதியவர் ஒருவரை வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் இழுத்து சென்ற வீடியோ காட்சி வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.