தோட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை... கொந்தளித்த பெற்றோர்: போக்சோவில் சிக்கினார் 40 வயது நபர்

தோட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை... கொந்தளித்த பெற்றோர்: போக்சோவில் சிக்கினார் 40 வயது நபர்

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 40 வயது நபரை மேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் கண்டுகொள்ளாத நிலையில், குழந்தைகள் நல அலுவலர்கள் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நா.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9-ம் வகுப்பு படிக்கும் இவர் மேலூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னத்தோப்பில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் (40) தென்னந்தோப்புக்கு சென்று பெற்றோர் இல்லாத நேரத்தில் 14 வயதான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மாணவியின் பெற்றோர் மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில், மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டியின் உறுப்பினர் மாரிஸ்வரி, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷை மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று விசாரணைக்கு ஆஜர்படுத்தினார். அதன் பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in