திருமண ஆசைகாட்டி பலாத்காரம்; இளைஞரை நம்பிச்சென்ற பிளஸ்2 மாணவி: காதலனை சிறையில் தள்ளிய சிறுமியின் தாய்

பலாத்காரம்
பலாத்காரம் திருமண ஆசைகாட்டி பலாத்காரம்; இளைஞரை நம்பிச்சென்ற மாணவி: காதலனை சிறையில் தள்ளிய சிறுமியின் தாய்

பன்னிரண்டாம் வகுப்பு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அஜித் (22) . கூலித்தொழிலாளியான இவர்,  பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும்  திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். அதனை நம்பிய சிறுமியை அழைத்துச் சென்று  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இது குறித்து  அந்த சிறுமியின் தாயாருக்கு தகவல் தெரிய வந்திருக்கிறது.  இதனையடுத்து  சிறுமியின் தாயார்  ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து நேற்று  புகார் அளித்தார்.  அந்த புகாரின்பேரில்  வழக்குப் பதிவு செய்துள்ள  இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீஸார், நேற்று இரவு அஜித்தை  போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in