உங்கள் மகள் 4 மாதம் கர்ப்பம்; மருத்துவ பரிசோதனையில் பெற்றோர் அதிர்ச்சி: போக்சோவில் சிக்கிய இளைஞர்

போக்சோவில் சிக்கிய இளைஞர் சஞ்சய்
போக்சோவில் சிக்கிய இளைஞர் சஞ்சய்உங்கள் மகள் 4 மாதம் கர்ப்பம்; மருத்துவ பரிசோதனையில் பெற்றோர் அதிர்ச்சி: போக்சோவில் சிக்கிய இளைஞர்

மயிலாடுதுறை அருகே 10-ம் வகுப்பு மாணவியை  கர்ப்பமாக்கிய இளைஞர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சபாபதி  மகன் சஞ்சய் (21).  இவர் அப்பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு  திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி மாணவியை தனது வீட்டிற்கு சஞ்சய் அழைத்து சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததைப்  பயன்படுத்தி மாணவியை வலுக்கட்டாயப்படுத்தி தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். 

அதைத்தொடர்ந்து அடிக்கடி வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் மாணவியை  தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வல்லுறவில்  ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு  திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் அவரை  சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி  4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால்  அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மாணவியிடம் விசாரித்து தகவல்களை தெரிந்து கொண்டு  மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவல்லி மற்றும் காவல்துறையினர்  மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் மாணவியிடம்  ஆசைவார்த்தை கூறி தகாத உறவில் ஈடுபட்ட இளைஞர் சஞ்சய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை நேற்று மாலை  கைது செய்த அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in