நகைக்காக பெண்ணை கொலை செய்தவர் கைது

அப்துல் காதர்
அப்துல் காதர்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மகாதேவன் குளத்தை சேர்ந்த ஜான்ஷா(48)  என்பவர் ஜன.6 அன்று அவரது வீட்டில் இறந்துகிடந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் ஜான்ஷா உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்படி ஜான்ஷா இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர் பக்கீர் அலி(53) என்பவர், திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் ஸ்டிபன் ஜோஸ் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த விசாரணையில், இறந்து கிடந்த ஜான்ஷா அணிந்திருந்த நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக காவல்துறை அதே பகுதியில் கண்காணிப்பு பணியினை மேற்கொண்ட நிலையில் முகைதீன் என்ற அப்தூல் காதர்(42) பிடிபட்டார். விசாரணையில் நகைக்காக ஜான்ஷாவை கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அப்துல் காதரை கைது செய்த போலீஸார் மேல்  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in