கழிவறை சென்ற சக பெண் ஊழியரை வீடியோ எடுத்த இளைஞர்

கழிவறை சென்ற சக பெண் ஊழியரை வீடியோ எடுத்த இளைஞர்

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கழிவறை ஜன்னல் வழியாக பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று கவிதா தனது நிறுவனத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.

பிறகு எவரோ தன்னை கழிவறை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுப்பதாக சத்தம் போட்டவாறு வெளியே வந்துள்ளார்.

அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரியும் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் கையில் செல்போனுடன் தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து கவிதா வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கழிவறைக்கு சென்ற பெண்ணை முறைகேடாக வீடியோ எடுத்த குற்றத்தை பாலாஜி ஒப்புக் கொண்டார். இதனையடுத்து பாலாஜியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in