பொங்கல் பரிசு பெற வந்த இடத்தில் கைவரிசை: சிசிடிவியால் சிக்கிய சென்னை நபர்

பொங்கல் பரிசு பெற வந்த இடத்தில் கைவரிசை: சிசிடிவியால் சிக்கிய சென்னை நபர்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு பண்டக சாலையில் 48 ஆயிரம் பணத்தை திருடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் பணிப்புரிந்து வருபவர் கோமதி. இவர் பண்டக சாலையில் வைக்கப்பட்டிருந்த 48 ஆயிரம் பணம் திருடு போனதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசராணை மேற்கொண்ட போலீஸார், பண்டக சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அதில் அதே பகுதியை சேர்ந்த முகமது சமீர் நிஜாமி என்பவர் பணத்தை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. உடனடியாக நிஜாமியை கைது செய்த போலீஸார் அவரிடம் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பொங்கல் பரிசு பெற வந்த போது பணத்தை திருடியதாக நிஜாமி ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்த பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in