பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பசு!

உத்திரபிரதேச வக்கிரம்
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பசு!

பசு நேசர்கள் நிறைந்த உத்திரபிரதேசம் மாநிலத்தில், பசு கன்று ஒன்றினை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பசுக்களின் நலன் நாடும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோசாலையில் தொடங்கி பசுக்களுக்கு என சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை உட்பட பல்வேறு திட்டங்களை அரசே செயல்படுத்தி வருகிறது. இந்த மாநிலத்தில் பசு கன்று ஒன்றுக்கு நேர்ந்திருக்கும் கொடுமை பசு நேசர்களை உலுக்கி உள்ளது.

ஷாஜகான்பூர் மாவட்டத்தை சேர்ந்த சான்பூர் கிராமத்தில் வசிப்பவர் தாராசிங். இவருக்கு சொந்தமான தொழுவத்தில் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளை வைத்து பராமரித்து வருகிறார். கடந்த சில தினங்களாக தொழுவத்தில் விநோதமான நடமாட்டத்தை தாராசிங் அறிந்தார்.

திருடர் கைவரிசையாக இருக்குமோ என்ற எச்சரிக்கை உணர்வில், உறவினர்கள் சிலரோடு சேர்ந்து இரவு கண்விழித்து காத்திருந்தார். சனியன்று இரவு வழக்கமான நடமாட்டம் மற்றும் கால்நடைகளின் ஓசைகள் வெளிப்பட்டதும், தாராசிங் உள்ளிட்டோர் தடியோடு தொழுவத்துக்கு பாய்ந்தனர். அங்கே அவர்கள் கண்ட காட்சியில் உறைந்து போனார்கள்.

அதே பகுதியில் வசிக்கும் 35 வயதான ராம்பிரசாத் என்பவர், பிறந்து 2 மாதமேயான பசு கன்று ஒன்றினை பாலியல் ரீதியில் அங்கே துன்புறுத்திக்கொண்டிருந்தார். இதனை அடுத்து கையும் களவுமாக பிடிபட்ட ராம்பிரசாதை அடித்து உதைத்த கிராம மக்கள் போலீஸாரிடம் அடுத்த நாள் ஒப்படைந்தனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ராம்பிரசாதை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸார், பசு கன்றினை மருத்துவ பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in