`சென்னையில் உரிமம் வாங்கித் தருகிறேன்'- தொழிலதிபரிடம் 2.82 கோடியை ஏமாற்றிய மோசடி மன்னன் சிக்கினார்

`சென்னையில் உரிமம் வாங்கித் தருகிறேன்'- தொழிலதிபரிடம் 2.82 கோடியை ஏமாற்றிய மோசடி மன்னன் சிக்கினார்

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபரிடம் மும்பையில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் கிளையை சென்னையில் நடத்த உரிமம் வாங்கித்தருவதாக 2 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திரன். இவருக்கும் சென்னை முகப்பேரை சேர்ந்த பிரதிக் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் தொழில் தொடங்க வேண்டும் என மும்பையில் பணி புரியும் பிரதிகிடம் கூறியுள்ளார். இதற்கு மும்பையில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் கிளை சென்னையில் நடத்த உரிமம் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அதற்கான போலி ஆவணங்களை தயாரித்து அதனை ராஜேந்திரனிடன் காண்பித்துள்ளார். இதனை நம்பிய அவர் 2019-ம் ஆண்டு முதல் வங்கி பரிவர்த்தனை மூலமாகவும், ரொக்கமாகவும் 2 கோடியே 82 லட்சத்துக்கு 50 ஆயிரம் கொடுத்துள்ளார்.

4 ஆண்டுகளாகியும் உரிமம் பெற்று தராததால் கொடுத்த பணத்தை ராஜேந்திரன் திருப்பி கேட்டுள்ளார். பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை ஆவண மோசடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரதிக் பலரிடம் உரிமம் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது அம்பலமானது. இதனையடுத்து அவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in