சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருகிறேன்: கோவை பொறியாளரிடம் 6.50லட்சம் பணம் பறித்தவர் கைது

பாலமுருகன்
பாலமுருகன்சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருகிறேன்: கோவை பொறியாளரிடம் 6.50லட்சம் பணம் பறித்தவர் கைது

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி கோவையைச் சேர்ந்த பொறியாளரிடம் 6.50 லட்சம் ரூபாயைப் பறித்தவர் போலீராஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (27). பிஇ படித்த இவர் ஐ.டி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்தார். அப்போது வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ஆன்லைனில் பார்த்தார். அப்போது சிங்கப்பூரில் பொறியாளர் வேலைக்கு ஆட்கள் தேவையாக இருப்பதாக பெங்களூரு ஹோசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (30) என்பவர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

எனவே, அவரது செல்போனில் தொடர்பு கொண்டு ரஞ்சித்குமார் பேசினார். சிங்கப்பூரில் வேலை செய்ய விருப்பம் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து பாலமுருகன் வேலை வாங்கித் தருவதாக கூறினார். ரஞ்சித்குமாரிடம் வேலைக்கான ஆர்டர், பிராசசிங் என்ற பெயரில் பல்வேறு கால கட்டத்தில் 6.50 லட்ச ரூபாயை பாலமுருகன் பெற்றார். ஆனால், பணம் வாங்கி 2 ஆண்டாகியும் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இது தொடர்பாக ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண், எஸ்.ஐ சிவராஜ் பாண்டியன், தாமரைக்கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிந்து பாலமுருகனை இன்று கைது செய்தனர். பாலமுருகனிடம் விசாரித்தபோது இவர் போலியான ஆவணங்களைத் தயாரித்து அதன் மூலம் தொடர்ந்து  மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவரிடமிருந்து  செல்போன்கள், மின்னணு சாதனங்கள், 21 சிம்கார்டுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in