108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆண் மருத்துவ உதவியாளர்: நெகிழவைத்த சம்பவம்!

108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆண் மருத்துவ உதவியாளர்: நெகிழவைத்த சம்பவம்!

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் ஒருவர் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்து இருவரும் நலமுடன் இருக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை சேர்ந்தவர் திவ்யா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யாவுக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்து திவ்யாவை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அப்போது, போகும் வழியில் திவ்யாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் ஏழுமலை, திவ்யாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் திவ்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தாயும், சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 108 ஆம்புலன்ஸில் ஆண் மருத்துவ உதவியாளர் ஒருவர் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in