‘தயவுசெய்து மாலத்தீவு சுற்றுலாவின் பகுதியாக இருங்கள்’ இந்தியர்களிடம் மன்றாடும் மாலத்தீவு அமைச்சர்

மாலத்தீவு
மாலத்தீவு

'எங்கள் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்துள்ளது. எனவே தயவுசெய்து மாலத்தீவு சுற்றுலாவின் ஒரு பகுதியாக இருங்கள்' என்று இந்தியர்களிடம் மாலத்தீவு சுற்றுலா அமைச்சர் மன்றாடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் அவதூறான கருத்துக்களைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் மாலத்தீவுகள் பகிர்ந்து கொண்ட வரலாற்றை நினைவூட்டி, மாலத்தீவின் புதிய அரசாங்கமும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல் கூறினார்.

லட்சத்தீவு - பிரதமர் மோடி
லட்சத்தீவு - பிரதமர் மோடி

“எங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்தே செயல்பட விரும்புகிறது. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்பு சூழலை ஊக்குவிக்கிறோம். இந்திய வருகையாளர்களுக்கு எமது மக்களும் அரசாங்கமும் அன்பான வரவேற்பை வழங்குவார்கள். சுற்றுலாத் துறை அமைச்சர் என்ற முறையில், மாலத்தீவுகளின் சுற்றுலாவில் இந்தியர்களை தயவு செய்து ஒரு பகுதியாக இருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் பொருளாதாரம் சுற்றுலாவைச் சார்ந்துள்ளது” என்று இப்ராஹிம் பைசல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை அவதூறாக சித்தரித்தும், 3 மாலத்தீவு அமைச்சர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை அடுத்து சர்ச்சை வெடித்தது. அந்த அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட போதும், இந்தியாவுக்கு எதிரான மாலத்தீவு ஆட்சியாளர்களின் நிலைப்பாடு மாறாத நிலையில், கணிசமான இந்தியர்கள் தங்களது மாலத்தீவு சுற்றுலா திட்டத்தை ரத்து செய்தனர். இதனால் இந்தாண்டு தொடக்கம் முதல் மாலத்தீவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 42 சதவீதம் குறைந்தது. கடந்த ஆண்டு, ஜனவரி முதல் மே வரை மாலத்தீவுக்குச் சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 73,785 ஆக இருந்தது; இதுவே 2024-ல் 42,638 ஆக குறைந்தது.

மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் மார்ச் 4 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, மாலத்தீவு சுற்றுலாவின் 'டாப் 10' தேசங்களின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்திற்குச் சறுக்கிச் சென்றது. இதனால் சுற்றுலாவை பெரிதும் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தை கொண்டிருக்கும் மாலத்தீவு பலமான அடிவாங்கியது. எனவே, இந்தியாவிடமும், இந்தியர்களிடம் சரணாகதியாகும் வகையில் மாலத்தீவு அமைச்சரின் வேண்டுகோள் தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!

குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!

வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!

பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in