சபரிமலையில் ஜன.14-ல் மகரவிளக்கு பூஜை

சபரிமலையில் ஜன.14-ல் மகரவிளக்கு பூஜை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டின் மகரவிளக்கு பூஜை ஜன.14-ம் தேதியன்று  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  இந்தாண்டிற்கான நிறைவு பேட்டை துள்ளல் ஜன.11-ம் தேதியன்று நடைபெறுகிறது. அன்றைய தினம்  அம்பலப்புழா படைகள் வாவர் பள்ளியிலிருந்தும்,  ஆலங்காடு படை பேட்டை சாஸ்தா ஆலயத்திலிருந்தும் துவங்குகிறது.

பந்தளத்தில் இருந்து ஜன.12-ம் தேதி வானில் கிருஷ்ண பருந்து காட்சியுடன் பகவானுக்கு சாற்றப்படும் திருவாபரண பெட்டி புறப்பட்டு ஊர்வலமாக சென்று சபரிமலையை அடையும். மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள  ஜன.14-ம் தேதி காலையில்  மகர சங்கரம ஆயத்த பூஜைகளும், மதியம்  தீபாராதனையும் நடைபெறும். அதன் பிறகு நடை அடைக்கப்படும்.

சரங்குத்தி வழியாக  திருவாபரண பெட்டி  சந்நிதானம் வந்து  சேர்ந்தவுடன்  பகவானுக்கு சாற்றப்படும். அதனைத் தொடர்ந்து  வானில் மகர ஜோதியாக  பகவான் தோன்ற பொன்னம்பல மேட்டில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்களால் மகர விளக்கு ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து சந்நிதானத்தில் தர்ம சாஸ்தாவுக்கு தீபாராதனை நடைபெறும்.

மகர சங்கரம பூஜை சந்நிதான வழக்கப்படி இரவு  8.57 மணிக்கு பிறகு கவுடியார் அரண்மனை நெய்பிஷேகம் நடைபெறும். அதைப்பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.  மகர சங்கரம திதி மற்றும் ஜோதி அன்றைய தினம்  ஏற்றப்பட்டாலும் மகர சங்கரம புண்ணிய காலம் ஜன.15-ம் தேதி தான் ஏற்படுகிறது.

பின்னர் தொடர்ந்து ஆறு நாட்கள் பகவான் மணிமண்டபத்தில் இருந்து சரங்குத்தி எழுந்தருளும் பள்ளிவேட்டை நிறைவுக்கு பிறகு ஜன.20-ம் தேதி  பந்தள அரச பிரநிதிகள் தரிசனத்திற்கு பிறகு திருவாபரணம் படி இறக்கப்பட்டு சந்நிதானம் சாற்றப்பட்டு பகவான் யோக நித்திரைக்கு செல்வார் என்று தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in