நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பு ஆஜரானார் மஹுவா மொய்த்ரா!

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக இன்று நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா ஆஜரானார்.

அதானி குழுமம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்துகிறது.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

இந்த குழு முன்பாக ஏற்கனவே பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் நேரில் ஆஜராகி மஹூவா மொய்த்ராவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து மஹூவா மொய்த்ராவை அக்டோபர் 31-ல் ஆஜராக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு சம்மன் அனுப்பியது. ஆனால் நவம்பர் 5-ந் தேதிதான் தம்மால் ஆஜராக முடியும் என்றார் மஹூவா மொய்த்ரா. இருப்பினும் நவம்பர் 2-ல் ஆஜராக நெறிமுறைகள் குழு உத்தரவிட்டது. இதனடிப்படையில் இன்று நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பாக மஹூவா மொய்த்ரா ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் இருந்து என்னை வெளியேற்ற நினைப்பவர்கள், என் தலைமுடியைக் கூட தொட முடியாது என காட்டமாக விமர்சித்திருந்தார். மேலும் தம் மீது குற்றம்சாட்டிய ஜெய் ஆனந்த், பாஜக நிஷிகாந்த் துபே உள்ளிட்டோரை தாம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். அவர்களை என்னிடம் விட்டுவிடுங்கள். பொய் சொல்கிறவர்களை நான் பார்த்து கொள்கிறேன் எனவும் மஹூவா மொய்த்ரா கூறியிருந்தார்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

இதனிடையே தமது செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவது தொடர்பான ஆப்பிள் நிறுவன குறுஞ்செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த மொய்த்ரா, இது தொடர்பாவும் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகளை மத்திய அரசு கண்காணிப்பது அடிப்படை உரிமைகள் மீதான மிக மோசமான தாக்குதல் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார் மொய்த்ரா. அத்துடன் , புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தக் கூடிய மென்பொருட்களை பயன்படுத்தி உளவு பார்க்கிறது மத்திய அரசு. எங்கள் செல்போனில் உள்ள தரவுகள், கேமரா உள்ளிட்டவற்றை பார்ப்பதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது எனவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in