தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுக்கிறது சிபிஐ... தேர்தல் ஆணையத்தில் மஹுவா மொய்த்ரா புகார்!

சிபிஐ மீது மஹுவா மொய்த்ரா புகார்
சிபிஐ மீது மஹுவா மொய்த்ரா புகார்

சிபிஐ தன்னை துன்புறுத்துவதோடு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடபடவிடாமல் தடுப்பதாக திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி- மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்பி- மஹுவா மொய்த்ராவின் எம்.பி- பதவி சில மாதங்களுக்கு முன்பு பறிக்கப்பட்டது. இந்நிலையில் மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு ஊழல் தடுப்பு குறைதீர்ப்பு மன்றமான லோக்பால் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து மஹுவா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து அவரது இல்லம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் சோதனையில் ஈடுபட்டது.

இதற்கிடையே, வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட, மஹுவா மொய்த்ராவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இந்நிலையில் தற்போது தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள சூழலில் சிபிஐ தன்னை துன்புறுத்துவதாகவும், தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட விடாமல் தடுப்பதாகவும் மஹுவா மொய்த்ரா, சிபிஐ மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “எனது பிரச்சார முயற்சிகளைத் தொந்தரவு செய்வதற்கும், தடுப்பதற்கும் முயற்சிக்கும் சிபிஐ-யின் செயல் சட்டவிரோதமானது மற்றும் நியாயமற்றது. எனது தேர்தல் பிரச்சார முயற்சிகளை முறியடிப்பதும், அதன் மூலம் சட்டவிரோதமாக என்னை துன்புறுத்துவதும் சிபிஐ நடவடிக்கையில் எந்த சந்தேகமுமின்றி தெரிகிறது. என் மீது சிபிஐ விளைவிக்கும் களங்கங்கள் எனது அரசியல் எதிரிகளை வளப்படுத்துகிறது. சிபிஐ-ஆல் பயன்படுத்தப்படும் நேரம், வழிமுறைகள் ஆகியவை அரசியல் ஆணையின் இசைக்கு ஏற்பட அவர்கள் நடனமாடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.” இவ்வாறு அந்த புகாரில் மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in