5ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்கள்: 52 வயது ஆசிரியர் போக்சோவில் கைது

ஆபாச வீடியோ
ஆபாச வீடியோ5ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்கள்: 52 வயது ஆசிரியர் போக்சோவில் கைது

மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டியதாக 52 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோண்டியா மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றிய 52 வயது ஆசிரியர், 5ம் வகுப்பு படிக்கும் எட்டு சிறுமிகளுக்கு சில ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும், கடந்த மாதம் அவர்களை தகாத முறையில் தொட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறுமிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர் மாணவிகளின் பெற்றோர் பள்ளி முதல்வரை அணுகி புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு், கல்வி அதிகாரியின் விசாரணைக்குப் பிறகு மார்ச் 11 அன்று அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்

புகாரின் அடிப்படையில், ஆசிரியருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in