ரூ.10,00,000 லஞ்சம் வாங்கிய டீன்... கல்லூரியை அடித்து நொறுக்கிய தொண்டர்கள்!

மருத்துவக்கல்லூரியை சூறையாடிய நவநிர்மான் சேனா தொண்டர்கள்
மருத்துவக்கல்லூரியை சூறையாடிய நவநிர்மான் சேனா தொண்டர்கள்

புனேவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டிற்காக லஞ்சம் வாங்கியதாக டீன் பிடிபட்டதை அடுத்து, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பினர் அந்த மருத்துவக் கல்லூரியை அடித்து உடைத்து சூறையாடினார்கள்.

மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்து டீன் அலுவலகத்தை சேதப்படுத்தினர். கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் பெறுவதற்கு லஞ்சம் வாங்கியதாக டீன் சிக்கியதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் இன்று புனேவில் உள்ள பாரத ரத்னா அடல் பிஹாரி மருத்துவக் கல்லூரியில் உள்ள டீன் அலுவலகத்தை அடித்து உடைத்து நாசம் செய்தனர். டீனின் கேபினில் இருந்த மரச்சாமான்கள் மற்றும் கணினிகளை சூறையாடி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார்கள்.

அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புனே முனிசிபல் கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இக்கல்லூரியின் டீன் ஆஷிஷ் ஸ்ரீநாத் பங்கின்வார் (54) 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது நேற்று ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

ஒரு மாணவன் 2023 நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவனின் தந்தையிடம் டீன் ஆஷிஷ், ரூ.22.5 லட்சம் சேர்க்கை கட்டணத்துடன் கூடுதலாக ரூ.16 லட்சம் லஞ்சமாக கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர், பேரம் பேசி ரூ.10 லட்சம் தரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட டீன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நவநிர்மான் மாணவர் சேனா கோரிக்கை விடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in