கர்ப்பிணி மருமகளைக் கவனித்துக் கொள்ள வந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை: தந்தை,மகன் கைது

கர்ப்பிணி மருமகளைக் கவனித்துக் கொள்ள வந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை: தந்தை,மகன் கைது

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உறவுக்கார சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது தந்தை மற்றும் அவரின் 22 வயது மகன் ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, "குற்றம் சாட்டப்பட்ட 52 வயது நபர் தனது கர்ப்பிணி மருமகளை கவனித்துக்கொள்வதற்காகவும், அவருக்கு உதவி செய்வதற்காகவும் ஒரு மாதத்திற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் இருந்து 14 வயது உறவுக்கார சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பின்னர் தந்தையும், மகனும் பல சந்தர்ப்பங்களில் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்"என்று தெரிவித்தார்.

மேலும், "பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, கடைசியில் தைரியத்தை வரவழைத்து தனக்கு நேர்ந்த கொடுமையை அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். அவர்கள் உடனடியாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in