நள்ளிரவில் மயானத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்: பிரியாணியுடன் தடபுடல் விருந்து!

நள்ளிரவில் மயானத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்: பிரியாணியுடன் தடபுடல் விருந்து!

மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிவதற்காக மகாராஷ்ராவைச் சேர்ந்த ஒருவர், தனது பிறந்தநாளுக்கு மயானத்தில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடி, பிரியாணியுடன் தடபுடல் விருந்து வைத்த ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் வசிப்பவர் கெளதம் ரத்தன் மோர், சமூகத்தில் நிலவும் குருட்டு நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனது பிறந்தநாளை மயானத்தில் கொண்டாடினார்.

நவம்பர் 19 அன்று 54 வயதை எட்டிய கெளதம் ரத்தன் மோர், சனிக்கிழமை இரவு மோகனே மயானத்தில் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அங்கு விருந்தினர்களுக்கு கேக் மற்றும் பிரியாணியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது பேசிய மோர், “புகழ்பெற்ற சமூக சேவகர் சிந்துதாய் சப்கல் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த பிரபல பகுத்தறிவாளர் மறைந்த நரேந்திர தபோல்கர் ஆகியோரிடமிருந்து இந்த நிகழ்விற்கான உத்வேகத்தைப் பெற்றேன். பொதுவாக மயானம் தொடர்புடைய இடங்களில் பேய்கள் இல்லை என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிக்க விரும்பியே இந்த நிகழ்வை நடத்தினேன். 40 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in