2016-ல் நகையுடன் ஓட்டம் பிடித்த மகாராஷ்டிரா தொழிலாளி; அலட்சியமாக செயல்பட்ட போலீஸ்: நீதிமன்றம் காட்டிய அதிரடி

2016-ல் நகையுடன் ஓட்டம் பிடித்த மகாராஷ்டிரா தொழிலாளி; அலட்சியமாக செயல்பட்ட போலீஸ்: நீதிமன்றம் காட்டிய அதிரடி

நிலக்கோட்டை அருகே நகைக்கடைக்கு முலாம் பூசும் தொழில் செய்து வந்த மகாராஷ்டிரா தொழிலாளி 5 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் மாயமானார். நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து அவரைத் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சின்னப்பிள்ளை தெருவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் விஸ்வநாதன். இங்கு பணியாற்றிய கணேசனிடம் தங்க நகைகளுக்கு முலாம் பூசும் தொழிலாளியாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த அப்துல் சேட் என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 2016 மே 17-ம் தேதி 37 பவுன் நகைகளுடன் மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க திண்டுக்கல், நிலக்கோட்டை போலீஸில் பலமுறை புகாரளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனை தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் விஸ்வநாதன் நிலக்கோட்டை ஜே.எம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அப்துல் சேட்(50) மீது வழக்குப்பதிவு செய்து நிலக்கோட்டை போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in