‘குழந்தைகளின் தோலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்'- ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி பவுடருக்கு உரிமம் ரத்து!

மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் அதிரடி!
‘குழந்தைகளின் தோலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்'- ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி பவுடருக்கு உரிமம் ரத்து!

ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தயாரிப்பான ஜான்ஸன்’ஸ் பேபி பவுடருக்கான உரிமத்தை மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (எஃப்டிஏ) ரத்து செய்திருக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உடலில் பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் ஜான்ஸன்’ஸ் பேபி பவுடர், குழந்தைகளிடன் தோலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும்; பொது சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் எஃப்டிஏ விளக்கமளித்திருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன், இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. இதன் தயாரிப்பான ஜான்ஸன்’ஸ் பேபி பவுடரின் மாதிரிகளை ஆய்வகத்தில் பரிசோதித்தபோது அவற்றின் பிஎச் மதிப்புக்கு (pH value) அவை ஒத்திசைவாக அமையவில்லை என நேற்று வெளியிட்ட அறிக்கையில், எஃப்டிஏ தெரிவித்திருக்கிறது (ஒரு கரைச்சலின் தன்மை அமிலமா, காரமா என்பதைக் குறிப்பிடும் அலகு பிஎச் மதிப்பு என அழைக்கப்படுகிறது).

கொல்கத்தாவின் ‘மத்திய மருந்து ஆய்வக’த்தின் இறுதி அறிக்கையின்படி பிறந்த குழந்தைகளின் தோலுக்குப் பொருத்தமான ஐஎஸ் 5339:2004 எனும் விகிதாச்சரத்தில் பிஎச் மதிப்பு அமையவில்லை என்று எஃப்டிஏ தெரிவித்திருக்கிறது.

மேலும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940-ன்படி இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும், சந்தையிலிருந்து ஜான்ஸன்’ச் பேபி பவுடரைத் திரும்பப் பெறுமாறு அந்நிறுவனத்தை அறிவுறுத்தியிருப்பதாகவும் எஃப்டிஏ குறிப்பிட்டிருக்கிறது.

எனினும், இந்த அறிக்கையை ஏற்கவில்லை என்றும், தங்கள் தயாரிப்பின் மாதிரிகளை மத்திய மருந்து ஆய்வகத்துக்கு (சிடிஎல்) அனுப்பி வைக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை அணுகவிருப்பதாகவும் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in