மகாராஷ்டிராவில் நாள் ஒன்றுக்கு 1 கோடி முட்டைகள் பற்றாக்குறை: உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

மகாராஷ்டிராவில் நாள் ஒன்றுக்கு 1 கோடி முட்டைகள் பற்றாக்குறை: உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

மகாராஷ்டிராவில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி முட்டைகள் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், முட்டை உற்பத்தியை அதிகரிக்க கால்நடை பராமரிப்புத் துறை திட்டத்தை வகுத்துள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஒரு நாளைக்கு 2.25 கோடி முட்டைகள் உட்கொள்ளப்படுகின்றன. ஆனால் அம்மாநிலத்தில் ஒரு நாளைக்கு 1 முதல் 1.25 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான திட்டத்தை அரசு வகுத்து வருகிறது என்று கால்நடை பராமரிப்புத் துறையின் கூடுதல் ஆணையர் டாக்டர் தனஞ்சய் பர்கலே தெரிவித்தார்.

தற்போது பற்றாக்குறையாக உள்ள தினசரி 1 கோடி முட்டைகள் கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

மாநிலத்தில் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 1,000 கூண்டுகளுடன் ரூ.21,000 மானிய விலையில் 50 ஒயிட் லெகார்ன் கோழிகளை வழங்க கால்நடை பராமரிப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in