தண்டவாளத்தில் நின்ற மக்னா யானை; மின்னல் வேகத்தில் வந்த ரயில்: கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய அதிசயம்

 மக்னா யானை
மக்னா யானைதண்டவாளத்தில் நின்ற மக்னா யானை; மின்னல் வேகத்தில் வந்த ரயில்: கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய அதிசயம்

ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் மக்னா யானை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

தர்மபுரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட மக்னா யானை கடந்த 5-ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. 6-ம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்றது. கோவை பேரூர் பகுதிக்கு சென்ற மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை அடுத்த மானாம்பள்ளி வனப்பகுதியில் வனத்துறையினர் யானையை விட்டனர்.

தண்டவாளத்தில் நின்ற மக்னா யானை
தண்டவாளத்தில் நின்ற மக்னா யானை

இதனிடையே மக்னா யானை சுற்றி திரிந்தபோது, மதுக்கரை அருகே ரயில் தண்டவாளத்தில் நின்றுள்ளது. அப்போது அவ்வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. மதுக்கரை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் யானையின் உயிரை காப்பாற்றினர். தண்டவாளத்தில் நிற்கக்கூடிய மக்னா யானை ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் இருந்து நொடி பொழுதில் கீழே இறங்கி உயிர் தப்பும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in