மாகாபா, பிரியங்காவின் கலகலப்புடன் புதிய கேம் ஷோ: 'ஊம் சொல்றியா ஊஹும் சொல்றீயா?'


மாகாபா, பிரியங்காவின் கலகலப்புடன் புதிய கேம் ஷோ: 'ஊம் சொல்றியா ஊஹும் சொல்றீயா?'

விஜய் தொலைக்காட்சியில் மகாபா ஆனந்த், பிரியங்கா இணைந்து வழங்கும் புதிய கேம் ஷோ தொடங்க உள்ளது.

சின்னத்திரையில் புதிய, புதிய கேம் ஷோக்களை நடத்துவதில் புகழ் பெற்ற விஜய் தொலைக்காட்சியில் அடுத்த புதிய கேம் ஷோ தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த், பிரியங்கா தொகுத்து வழங்க உள்ளனர். ஏற்கெனவே இவர்கள் இருவரும் 'சூப்பர் சிங்கர்', 'தி வால்', 'சவுண்ட் பார்ட்டி' உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளனர்.

மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து ‘ஊம் சொல்றியா ஊஹூம் சொல்றீயா’ என்ற 'புஷ்பா' படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் வரிகளில் ‘Oo Solrya Oohm Solriya Yes or Miss’ என்ற டைட்டிலுடன் வித்தியாசமான கேம் ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்க உள்ளனர்

இந்த புதிய ஷோவில் முதல் போட்டியாளராக 'குக் வித் கோமாளி' புகழ் பவித்ரா கலந்து கொள்கிறார். கலகலப்பு, கேலி கிண்டலுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in