மத்தியச் சுற்றுச்சூழல் துறை அனுமதி: வேகமெடுக்கப் போகும் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டம்

மதுரவாயல் - துறைமுக பறக்கும் சாலை
மதுரவாயல் - துறைமுக பறக்கும் சாலைமதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி

ரூ.5721.33 கோடி மதிப்பிலான சென்னை மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அதிமுக அரசு தடை விதித்தது. இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையெழுத்தானது.

இந்த திட்டத்திற்காக தமிழக அரசு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழுவிடம் அனுமதி கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

பறக்கும் சாலை வரைப்படம்.
பறக்கும் சாலை வரைப்படம்.மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி
பறக்கும் சாலை வரைப்படம்
பறக்கும் சாலை வரைப்படம்மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி

இதன்படி மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு அளித்துள்ள அனுமதியில் திட்டமதிப்பீடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மதீப்பீடு ரூ. 5721.33 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பறக்கும் சாலை 20.565 கி.மீ நீளமுள்ளது, மொத்தம் 604 தூண்கள் அமைக்கப்படவுள்ளன. அதில் 375 தூண்கள் கூவ ஆற்றின் பகுதிகளிலும், 210 தூண்கள் கடலோர பாதுகாப்பு ஒழுங்குமுறை மண்டல பகுதிகளிலும் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட 30 மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in