காருக்குள் வரம்பு மீறிய காதலன்; கொந்தளித்த துணை நடிகை: மதுரையில் நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி

துணை நடிகை- காதலன் சண்டை
துணை நடிகை- காதலன் சண்டை காருக்குள் பாலியல் தொல்லை; நடுரோட்டில் துணை நடிகை- காதலன் சண்டை: மதுரையில் நடந்த அதிர்ச்சி

மகா சிவராத்திரிக்கு வந்த இந்தி துணை நடிகையும் அவருடைய காதலனும் மதுரையில் நடுரோட்டில் சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் வாராணசியைச் சேர்ந்தவர் அங்கீதா பட்டாச்சார்யா. துணை நடிகையான இவர், பீகாரையைச் சேர்ந்த தனது காதலர் நிதீஷ்குமார் என்பவரிடம் கோவையை வந்துள்ளார். மகா சிவராத்திரியில் பங்கேற்ற அவர்கள் பின்னர் மதுரைக்கு வந்துள்ளனர். அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று காரில் செல்ல இருவரும் தயாராகி கொண்டிருந்தனர். அப்போதுஇ பழங்காநத்தம் புறவழிச் சாலையில் காருக்குள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

பின்னர் இருவரும் காரில் இறங்கி தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் அங்கீதாவையும், அவரது காதலனையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது, அங்கீதாவிடம் நிதீஷ் குமார் தவறாக நடந்துக் கொண்டது தெரியவந்தது. பின்னர் இருவருக்கும் அறிவுரை கூறிய காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். நடுரோட்டில் துணை நடிகையும் அவரது காதலனும் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in