சிக்கினார் 'ஸ்கெட்ச் கில்லாடி' ரவுடி மதுரை பாலா... கேரளாவில் சுற்றிவளைத்த போலீஸ்!

ரவுடி பாலா
ரவுடி பாலா

கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மதுரையை சேர்ந்த ரவுடியை குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் கேரளாவில் கைது செய்தனர்.

இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கூலிப்படையை ஏவி கொலை செய்யும் ஏ ப்ளஸ் வகை ரவுடி மதுரை பாலா. இவர் மீது கொலை ஆள்கடத்தல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடி சிவகுமார் உட்பட பல ரவுடிகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து அவர்களின் கதையை முடித்தவர் பாலா. 

ஜாமீனில் வெளிவந்த ரவுடி மதுரை பாலா வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கேரளா மாநிலம் சென்ற அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார், முறிங்கூர் அருகில் ரவுடி மதுரை பாலாவை நேற்று கைது செய்தனர். இதன்பின் அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in