மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நள்ளிரவில் பற்றி எரிந்த தீ: பொங்கல் வேட்டி, சேலை சாம்பல்

மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நள்ளிரவில் பற்றி எரிந்த தீ: பொங்கல் வேட்டி, சேலை சாம்பல்

மதுரை கலெக்டர் அலுவல வளாகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப இருந்த வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. 

மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த பல்வேறு துறைகளின் இரவு காவலாளிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, 4 தீயணைப்பு வாகனங்கள் வீரர்கள் அங்கு வந்தனர். இரண்டரை மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தில், அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள், ஆவணங்கள், ரேஷன் கடைகளுக்கு இன்று அனுப்ப இருந்த பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை பண்டல்கள் ஏராளமாக எரிந்து சேதமாகின என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  

மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து தல்லாகுளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in