மதுரை எய்ம்ஸ் திட்ட இயக்குநர் காலமானார்

மதுரை எய்ம்ஸ் திட்ட இயக்குநர் காலமானார்

மதுரை எய்ம்ஸ் திட்ட இயக்குநர் உடல் நலக்குறைவால் காலமானார்.

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட இயக்குநராக மூளை நரம்பியல் டாக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டு இருந்தார்.  இவர், சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை., ஆற்றல் சார் பேராசிரியராகவும், பெங்களூரு தேசிய மனநல அகாடமி உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி நெறிமுறை குழு தலைவராகவும் இருந்தார். உடல் நலக்குறைவால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று அதிகாலை காலமானார். இவர், உணவு பொருள் வழங்கல் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் மாமனார் ஆவார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in