பெண்ணிடம் பண்பற்ற வகையில் வக்கீல் கேள்வி: மன்னிப்பு கேட்ட நீதிபதி

பெண்ணிடம்  பண்பற்ற வகையில் வக்கீல் கேள்வி: மன்னிப்பு கேட்ட நீதிபதி

பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதற்கு,  மேல்முறையீட்டு மனு தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கோரியுள்ளார்.

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில், பாகப்பிரிவினை தொடர்பான வழக்கில், குறுக்கு விசாரணையின் போது, இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர், மூன்று பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும், அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் கேள்வி எழுப்பியுள்ளார்.  நீதிமன்றத்திலேயே இந்த விவகாரம் நடைபெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி பரத சக்ரவர்த்தி, அதற்காக இந்த சென்னை உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனுதாரர்களை அவமானப்படுத்துவதற்காகவோ, அவர்களுக்குக் காயத்தை ஏற்படுத்துவதற்காகவோ குறுக்கு விசாரணை இல்லை எனத் தெரிவித்துள்ள நீதிபதி, தங்களது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையைப் படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in