முதலமைச்சர் வீடு முற்றுகை வழக்கை ரத்துசெய்ய இயலாது- உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

முதலமைச்சர் வீடு முற்றுகை  வழக்கை ரத்துசெய்ய இயலாது-  உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மேலும் மரணங்கள் நிகழக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததை கண்டித்தும் ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தின் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கியும், உடைகளை கிழித்தும், காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியதாகவும்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்வரி புகார் அளித்தார். அந்த புகாரில் ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்த 35க்கும் மேற்பட்டோர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகள் மற்றும் பொது சொத்தை  சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கௌசிக், உகேந்திரன், சுசீலா, அமர் வஞ்சிதா உள்ளிட்ட 31 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களது மனுவில்,  'மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு சக மாணவர் என்ற முறையில் போராடியதாகவும், முதலமைச்சரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே தங்களது நோக்கமாக இருந்ததாகவும், ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்கவில்லை' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று  விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in