சம்ஸ்கிருதம் போல தமிழுக்கும் தேசியகவுன்சில் அமைக்கக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்சம்ஸ்கிருதம் போல தமிழுக்கும் தேசியகவுன்சில் அமைக்கக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்கக் கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், 'தொன்மையான தெய்வீக மொழியான தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தபோதும், துரதிருஷ்டவசமாக அது நடைமுறைக்கு வரவில்லை.

காசி தமிழ்ச்சங்கமம் தவிர வேறு எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்பதால், தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

கடந்த 1990-ம் ஆண்டுகளில் உருது, சிந்தி, இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளின் மேம்பாட்டுக்காக தேசிய கவுன்சில் அமைத்த மத்திய அரசு, செம்மொழியான தமிழ்மொழிக்கும் அதைப்போன்ற தேசிய கவுன்சிலை அமைக்க வேண்டும்' என  மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in