மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏவிற்கு எதிரான வழக்கு: சுயேச்சை வேட்பாளர் மனு தள்ளுபடி

மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏவிற்கு எதிரான வழக்கு: சுயேச்சை வேட்பாளர் மனு தள்ளுபடி

மண்ணச்சல்லூர் தொகுதியில்  வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்று பெற்ற திமுக வேட்பாளர் கதிரவனை தகுதி நீக்கம் செய்யக்கோரி  அந்த தொகுதியில் போட்டியிட்ட  சுயேச்சை வேட்பாளர் குருநாதன் என்பவர்  இரண்டாவது முறையாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மண்ணச்ச நல்லூர் சட்டமன்றத் தொகுதியில் பணம் பட்டுவாடா நடைபெற்றுள்ளதாகவும், எனவே வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிரவனைத் தகுதி நீக்கம் செய்யவேண்டும் எனவும் கோரியிருந்தார்.  அந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் முன்பாக இன்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் அரசு பீளிடர் முத்துக்குமார் ஆஜராகி வாதிட்டார்.  'ஏற்கெனவே இந்த மனுதாரர் இதே போன்று மனு தாக்கல் செய்து திரும்ப பெற்றுள்ளதாகவும்,  மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில்தான்  இதுபோன்ற மனு தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தல்ல.  விளம்பரத்திற்காக  தொடர்ந்த இந்த  வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் குருநாதனின்  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in