நாட்டிலேயே இந்த மாநிலத்தில்தான் புலிகள் எண்ணிக்கை அதிகம்... வெளியானது புள்ளிவிவரம்!

புலி
புலிநாட்டிலேயே இந்த மாநிலத்தில்தான் புலிகள் எண்ணிக்கை அதிகம்... வெளியானது புள்ளிவிவரம்!

மத்திய பிரதேசத்தில் 2018-ல் 526 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-ல் 785 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சர்வதேச புலிகள் தினத்தையொட்டி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் வெளியிட்டுள்ள 'புலிகளின் நிலை -2022’ என்ற அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடகா ( 563) மற்றும் உத்தாரகண்ட் (560) மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கணக்கெடுப்பின்படி, மத்தியப் பிரதேசக் காடுகளில் நான்கு ஆண்டுகளில் 259 புலிகள் அதிகரித்துள்ளன. இதுகுறித்துப் பேசிய முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், “நமது மாநில மக்களின் ஒத்துழைப்பு மற்றும் வனத்துறையின் அயராத முயற்சியின் விளைவாக, மாநிலத்தில் புலிகளின் எண்ணிக்கை 526-லிருந்து 785 ஆக நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.

2006-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் புலிகளின் எண்ணிக்கை 300 ஆக இருந்தது. அதன்பின்னர் 2010-ம் ஆண்டில் கர்நாடகாவில் 300 ஆக புலிகள் எண்ணிக்கை இருந்தபோது, ம.பியில் 257 ஆக எண்ணிக்கை குறைந்ததால் அம்மாநிலம் முதலிடத்திலிருந்து கீழிறங்கியது. 2014-ம் ஆண்டில், கர்நாடகாவில் 406 புலிகள் இருந்தன, அதே சமயம் ம.பியில் 300 புலிகள் எண்ணிக்கை பதிவாகியுள்ளன.

ஆனால், 2018-ம் ஆண்டில் கர்நாடகாவில் 524 புலிகள் இருந்தபோது, 526 புலிகளுடன் ம.பி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவும், "இந்தியாவின் முன்னணி புலி மாநிலம்" என்ற அந்தஸ்தைத் தக்கவைத்ததற்காக மத்தியப் பிரதேசத்தை வாழ்த்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in