
மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு வயது கன்றுக்குட்டியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்திலுள்ள மலைகாவா கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறத்தில், சனிக்கிழமை இரவு ஒரு நபர் இரண்டு வயது கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கன்றுக்குட்டியின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்ததையடுத்து அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து பசுவின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் தெரிவித்தார்.