முதியவரை கொடூரமாக தாக்கும் காவலர்: வெளியானது அதிர்ச்சி வீடியோ!

முதியவரை கொடூரமாக தாக்கும் காவலர்: வெளியானது அதிர்ச்சி வீடியோ!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவரை, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தின் சுமார் 30 வினாடி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் ஒரு முதியவரை போலீஸ் கான்ஸ்டபிள் அவரது முகத்தில் கொடூரமாக உதைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

எழுந்திருக்க முயற்சிக்கும் முதியவரை மீண்டும் மீண்டும் உதைத்து கீழே தள்ளும் அந்த கான்ஸ்டபிள், அந்த நபரின் கால்களைப் பிடித்து இழுத்து ரயில் தண்டவாளத்தில் கீழே தொங்கவிட்டபடி முகத்தில் தொடர்ந்து உதைக்கிறார். முதியவரை போலீஸ் அடிப்பதை சுற்றியிருக்கும் மக்கள் வேடிக்கை பார்த்தபடியே நிற்கின்றனர். ரயில்வே சந்திப்பில் நின்று கொண்டிருந்த ரயிலுக்குள் இருந்த பயணி ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, அந்த கான்ஸ்டபிள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ரேவா தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in