குறைந்தது தங்கத்தின் விலை: வெள்ளியின் விலையிலும் சரிவு!

குறைந்தது தங்கத்தின் விலை: வெள்ளியின் விலையிலும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 4, 770 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 280 ரூபாய் குறைந்து, ரூபாய் 38,160க்கு விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,900 வரை உயர்ந்த நிலையில், தற்போது கிராமின் விலை ரூ.4,770 ஆக குறைந்துள்ளது.

வெள்ளியின் விலையும் ஒரு கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 60 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதுபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஜூலை மாதத்தின் முதல் வாரங்களில் 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற வெள்ளியின் விலை, அதன் பிறகு ஏற்ற இறக்கங்களை சந்தித்து தற்போது 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in