குமரி நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

குமரி நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரி கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி இன்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு- தென்கிழக்கு நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வட மேற்கு திசையில் நகரக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரி கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் பொதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரித இடங்களிலும் இதையும் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 25-ம் தேதி தென்கிழக்கு மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 26-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அனேக இடங்களிலும் வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதிகள் குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் மேற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை மீனவர்கள் இப்போது செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in