மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி அத்துமீறல்... வைரலாகும் வீடியோ!

காதல் ஜோடி அத்துமீறல்
காதல் ஜோடி அத்துமீறல்

டெல்லியில் மெட்ரோ ரயிலில் காதலர்கள் முத்தம் கொடுத்த சம்பவம் பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லி மெட்ரோ ரயிலில் தினந்தாேறும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். அதோடு, பயணிகள் முன்னிலையிலேயே காதல் ஜோடிகளின் அத்துமீறல்களும் நடந்து வருகின்றன. மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், காதலுக்கு கண் இல்லை என்பதைப் போல காதலர்கள் கண்டு கொள்ளாமல் லஜ்ஜையின்றி அத்துமீறலில் ஈடுபட்டு வருவது பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. இந்தநிலையில், மெட்ரோ ரயிலுக்குள் மெய்மறந்து காதல் ஜோடி ஒன்று முத்தமிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயிலின் வாசலில் நின்று கொண்டிருக்கும் காதல் ஜோடி திடீரென முத்தமிட்டுக் கொள்கிறது. இதைப் பார்த்த பயணிகள் முகம் சுளிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

டெல்லி மெட்ரோ ரயிலில் காதலர்கள் அத்துமீறுவது புதிதல்ல. அண்மை காலமாகவே காதலர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொள்வது, கவர்ச்சி உடையில் செல்வது, நடனமாடுவது, மேக்கப் போட்டுக் கொள்வது என தொடர்ந்து எல்லை மீறும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in