'நீங்க பார்த்த பெண்ணை எனக்குப் பிடிக்கலை': காதலியோடு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

'நீங்க பார்த்த பெண்ணை எனக்குப் பிடிக்கலை': காதலியோடு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

தனக்குப் பிடிக்காத பெண்ணை திருமணம் செய்வதற்கு நிச்சயம் செய்ததால் மனமுடைந்து காதலியோடு சேர்ந்து இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவாஹ் மாவட்டம் ராம்நகரைச் சேர்ந்தவர் விமல்குமார் (25) பி.பார்ம் படித்து வந்தார். இவரும் அதேபகுதியைச் சேர்ந்த மான்சி (22) என்ற பெண்ணும் நீண்ட நாளாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் விமல்குமாருக்கு அவரது வீட்டில் பெண் பார்த்து வந்தனர். இதற்கு விமல்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையும் மீறி 2 மாதங்களுக்கு முன்பு விமல்குமாருக்கு திருமணம் செய்ய ஒரு பெண்ணை நிச்சயம் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த விமல்குமார், தனது காதலி மான்சியுடன் நேற்று வீட்டை விட்டு வெளியேறினார். இவரும் ராம்நகர் பகுதியில் உள்ள எட்டவா ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.
அப்போது அங்கு வந்து கொண்டிருந்த ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் காதலர்கள் இருவரும் பாய்ந்தனர். இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில் நிலைய அதிகாரி நௌஷாத் அகமது கூறுகையில், இருவரும் ஒன்று சேர்ந்து ரயில் முன் பாய்ந்ததாக கூறியுள்ளார்.
தனக்குப் பிடிக்காத பெண்ணுடன் திருமணம் செய்ய பெற்றோர் எடுத்த முடிவால் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in