வேலை செய்த வீட்டில் பெண் செய்த காரியம்; காதலனுடன் சுக போக வாழ்க்கை - சென்னையில் நடந்த அதிர்ச்சி

வேலை செய்த வீட்டில் பெண் செய்த காரியம்; காதலனுடன் சுக போக வாழ்க்கை - சென்னையில் நடந்த அதிர்ச்சி

வேலை பார்த்த வீட்டில் திருடிய பணம், நகைகளை வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த காதல் ஜோடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகர் 7-வது தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது வீட்டிலிருந்து 30 பவுன் நகை, 6 லட்சம் பணம் கொள்ளை போனது. இது குறித்து அண்ணா நகர் காவல் துறையில் மகேஷ்வரன் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் வேலை பார்த்து வந்த சுகுணா, அவரது காதலர் பாபு ஆகியோர் திட்டம் தீட்டி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்த பணத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து பணம், நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in