பைக்கை நிறுத்திவிட்டு காதல் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: மோசமாக ஆடை அணிந்ததால் நடந்த விபரீதம்

கொலை
கொலை

கன்னியாகுமரி மாவட்டம், மூலச்சலில் காதல் மனைவியோடு ஏற்பட்டத் தகராறில் கணவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மூலச்சல் பன்றி வெட்டான்விளைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபசிங்(54). இவரது மகள் ஜெயபிரின்ஷா(31). இவர் அழகிய மண்டபம், தச்சகோடு பகுதியைச் சேர்ந்த எபனேசர்(35) என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்தார். எபனேசர் டிரைவர் வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கேரளத் தலைநகர், திருவனந்தபுரத்தில் ஜெயபிரின்ஷா பியூட்டீசியன் கோர்ஸ் படித்துவந்தார். அவர் உடுத்தும் ஆடைகள் பிடிக்காமல் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜெயபிரின்ஷா நேற்று இரவு தன் கணவரோடு மூலச்சலில் உள்ள தன் அப்பாவின் வீட்டிற்குச் சென்றுவிட்டு பைக்கில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பரைக்கோடு பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தன் மனைவியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார் எபனேசர். தொடர்ந்து அங்கிருந்து தலைமறைவானார் எபனேசர். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தக்கலை போலீஸார் ஜெய பிரின்ஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தலைமறைவான எபனேசரை போலீஸார் தேடிய நிலையில், அவர் வேறு ஒரு பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்து சிகிச்சை கொடுத்துவருகின்றனர். உடை தொடர்பான தகராறு கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in