‘மைனர்’ வயதினரின் காதலை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

‘மைனர்’ வயதினரின் காதலை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Updated on
2 min read

காதல் மீதான ஈர்ப்பால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் பதின்ம வயது காதலர்களை, சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சிறுமியைக் கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றம்
அலகாபாத் உயர்நீதிமன்றம்

உத்திரபிரதேசம் மாநிலம், அலகாபாத் நீதிமன்றத்தில், 18 வயதுக்குட்பட்ட சிறுமியை, காதலித்து வந்த இளைஞர் ஒருவர் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர். இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி வாதங்கள் நேற்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ராகுல் சதுர்வேதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதி ராகுல் சதுர்வேதி, மைனர் பெண்ணைக் கடத்தி சென்று திருமணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை வழக்கில் இருந்து விடுதலை செய்தார். அதே சமயம், அந்த இளைஞர் மீதான அனைத்து குற்றவியல் நடைமுறைகளையும் ரத்து செய்து தனது தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு குறித்த தீர்ப்பில், "மைனர்களாகவே இருந்தாலும் இருவருக்கும் இடையேயான உண்மையான அன்பை சட்டத்தின் வாயிலாக கட்டுப்படுத்த இயலாது. காதலித்து வந்தவர்களின் உறவில், இளைஞர் மீது பெண்ணின் பெற்றோர் குற்றசாட்டு முன்வைப்பது, அவர்களின் திருமண உறவில் விஷத்தை செலுத்துவது போன்றது. நாம் சட்டத்தை மதிக்கும் அதே தருணத்தில், காதலித்து கல்யாணம் செய்து கொண்டு, அமைதியாக, சந்தோஷமாக குடும்பம் நடத்த வரும் இளம்ஜோடிக்கு எதிராக காவல்துறை மூலமாக எடுக்கும் நடவடிக்கையை நியாப்படுத்த போராடவேண்டியிருக்கும்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுவர்களாக இருந்தாலும், இருவருமே தங்களது காதலில் உறுதியாக இருப்பதையும், யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, காதலனுக்கு எதிரான குற்றவியல் நடைமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. எந்தவிதமான கட்டாயப்படுத்தலும் இல்லாமல் சிறுமி, தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...  


‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

மிஸ் பண்ணிடாதீங்க... இன்று 17 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... ஐசிசி விதியால் சிக்கலில் இந்திய அணி!

அதிர்ச்சி வீடியோ... யானையை காரில் துரத்திய அதிமுக பிரமுகர்: ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!

அதிமுக ஆட்சியில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை - எஸ்.பி.வேலுமணி உறுதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in