காதல் தோல்வியால் வக்கீல் எடுத்த விபரீத முடிவு: கோழிப்பண்ணையில் பிணமாக மீட்பு

ரெவின்குமார்
ரெவின்குமார்

காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமான நிலையில் வழக்கறிஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். அவரது உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரெவின்குமார்(27). ஆலந்தூர் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணை ஒட்டியம்பாக்கம், மலையடிவாரத்தில் உள்ளது.

அங்கு விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தவரை அவரது சகோதரர் பார்த்து ஆம்புலன்சுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அவரைப் பரிசோதித்து பார்த்த போது ரெவின்குமார் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த பெரும்பாக்கம் போலீஸார், ரெவின்குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ரெவின்குமார் காதலித்த பெண் ஒரு வருடத்திற்கு முன்பாக வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் மனவிரக்தியில் இருந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in