முகநூலில் மலர்ந்த காதல்; இந்தோனேஷியா பெண்ணை மணந்த 62 வயது மதப்போதகர்: வீட்டை முற்றுகையிட்ட உறவுகள்

மதப்போதகரின் வீட்டை முற்றுகையிட்ட உறவினர்கள்
மதப்போதகரின் வீட்டை முற்றுகையிட்ட உறவினர்கள் முகநூலில் மலர்ந்த காதல்; இந்தோனேஷியா பெண்ணை மணந்த 62 வயது மதப்போதகர்

முகநூல் மூலம் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து கைப்பிடித்த 62 வயது மதப்போதகருக்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் வீட்டை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பருத்திவிளைப் பகுதியில் மதப்போதகர் ஒருவர் உள்ளார். 62 வயதான இவர் வீடு, வீடாகப் போய் மதப்பரப்புரை செய்துவந்தார். இதேபோல் உடல்நலன் குன்றியவர்களுக்கும் வீட்டிற்கேப்போய் பிரார்த்தனை செய்துவந்தார். இவருக்குத் திருமணம் ஆகவில்லை. வீட்டில் தனியாகவே வசித்துவந்தார். அண்மையில் இவருக்கு ஃபேஸ்புக் மூலம் இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர் மீது காதல் வயப்பட்டார். அந்தப் பெண்ணும் போதகரைக் காதலித்தார்.

கடந்த டிசம்பர் 21-ம் தேதி போதகரைத் தேடி, இந்தோனேஷியா பெண் நாகர்கோவில் வந்தார். இவர்கள் ஒரு தேவாலயத்தில் வைத்துத் திருமணமும் செய்தனர். அப்போதே இந்தத் திருமண விவகாரம் தெரிந்து போதகரின் உறவினர்கள் பிரச்சினை செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு போதகர் வீட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு உணவு வாங்கச் சென்றார். அப்போது அங்கு திரண்ட போதகரின் உறவினர் வீட்டில் இந்தோனேஷியா பெண்ணை வைத்துப் பூட்டினர்.

போதகர் வீடுதிரும்பிய போது, வீட்டில் ஏராளமான பேர் குவிந்து இருந்தனர். அவர்கள் போதகரை வீட்டுக்குள் செல்லவும் அனுமதிக்கவில்லை. உடனே போதகர் இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் போதகரின் உறவினர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்குள் அவரை அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போதகரையும், இந்தோனேஷியா பெண்ணையும் இன்றுமாலையில் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறும் கூறிச்சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in