ஃபேஸ்புக்கில் மலர்ந்த வில்லங்க காதல்... 15 வயது சிறுவனை பிரிய மறுத்த 35 வயது பெண்: போராடி பிரித்த போலீஸ்

ஃபேஸ்புக்கில் மலர்ந்த வில்லங்க காதல்... 15 வயது சிறுவனை பிரிய மறுத்த 35 வயது பெண்: போராடி பிரித்த போலீஸ்

ஃபேஸ்புக் மூலம் 35 வயது பெண்ணுக்கும் 15 வயது சிறுவனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. கணவன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் போராடி அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் பிஹாரில் நடந்துள்ளது.

சமுதாய சீரழிவுக்கு சமூக வலைதளங்கள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. பெரும்பாலான சிறுவர், சிறுமிகள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் பல வினைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியதிருக்கிறது. கள்ளக்காதல், தவறான உறவுகள், பழக்கங்கள் இதன் உருவாகி வருகின்றன. சில கும்பல்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி சிறுமிகள், பெண்களை குறிவைத்து அவர்களின் வாழ்க்கை சீரழித்து வருகின்றன. வயது வித்தியாசமின்றி காதலும் மலர்ந்து வருகின்றன.

இப்படி ஒரு சம்பவம் பிஹாரில் நடந்துள்ளது. ஜாமுய் பகுதியில் வசித்து வருகிறார் 35 வயதுடைய பெண் ஒருவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றன. செல்போனுக்கு அடிமையான இவர், முகநூலில் கணக்கு வைத்துள்ளார். அப்போது, 15 வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதையடுத்து, அந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துள்ளார் அந்த பெண். தனது உறவினர் என மனைவி கூறியதை நம்பியுள்ளார் கணவர். அடிக்கடி அந்த சிறுவன் வீட்டிற்கு வந்துள்ளான். இதனால், மனைவியின் நடத்தையில் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் உண்மை தெரிந்து இரண்டு பேரையும் அடித்து உதைத்துள்ளார் கணவர். இந்த விவகாரம் காவல்நிலையத்துக்கு சென்றது. காவல்துறையினரிடம், சிறுவனை விட்டு பிரிய மாட்டேன் என்று அந்த பெண் கூறியுள்ளார். ஆனால், சிறுவன் மைனர் என்பதால் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் காவல்துறையினர் சேர்த்தனர். அந்தப் பெண்ணை போராடி சமாதானப்படுத்திய காவல்துறையினர் அவரது கணவருடன் அனுப்பிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in