எல்லையோர மாவட்டங்களில் களைகட்டும் லாட்டரி விற்பனை: 6 பேர் கைது

எல்லையோர மாவட்டங்களில் களைகட்டும் லாட்டரி விற்பனை: 6 பேர் கைது

கோவையில் லாட்டரி சீட்டு விற்ற ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு லாட்டரிச் சீட்டுக்கு தடை விதித்துள்ளது. அதேநேரத்தில் கேரளத்தில் லாட்டரி சீட்டை அரசே நடத்துகிறது. இதனாலேயே கேரளத்தில் லாட்டரி சீட்டை வாங்கி தமிழகத்தில் கொண்டு வந்து விற்பதும் நடந்து வருகிறது.

கோவையில் வடக்கிப்பாளையம் போலீஸார் உள்பட அனைத்துக் காவல்நிலையங்களிலும் லாட்டரிச்சீட்டு குறித்த திடீர் சோதனையை நடத்தினர். இதில்  தேவம்பட்டி வலசு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ரங்கசாமி(58) என்பவரைக் கைது செய்தனர். இதேபோல் பொன்னாபுரத்தைச் சேர்ந்த தங்கராஜ்(68), ஒத்தக்கால்மண்டபத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(39), திண்டுக்கல்லை சேர்ந்த நேசமணி(62), திண்டுக்கல் கிறிஸ்டோபர், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து லாட்டரி விற்ற  48 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 941 லாட்டரிச் சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கிறிஸ்டோபரிடம் இருந்து மட்டுமே 45 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in