ஆன்லைன் சூதாட்டத்தால் சொத்துகள் இழப்பு: வங்கி பணம் 44 லட்சத்துடன் தலைமறைவான கேஷியர் கைது!

வங்கி கேஷியர் முகேஷ்.
வங்கி கேஷியர் முகேஷ்.ஆன்லைன் சூதாட்டத்தால் சொத்துகள் இழப்பு: வங்கி பணம் 44 லட்சத்துடன் தலைமறைவான கேஷியர் கைது!

விழுப்புரம் அருகே வங்கியில் ரூ.43.86 லட்சம் பணத்துடன் தலைமறைவான கேஷியர் பிடிபட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தினால் கடனானியானதால் வங்கி பணத்தை அவர் கொள்ளையடிக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கி கிளையில் வளவனூர் இளங்காட்டினைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கேஷியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கமாக வங்கி பணிக்கு வந்தவர் திடீரென உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு வங்கி அருகே உள்ள விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது வெளியே செல்லும் போது, வங்கியிலிருந்த 43 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணத்தை முகேஷ் எடுத்துச் சென்றுள்ளார். அரசு மருத்துவமனைக்குச் சென்ற முகேஷ், அதன் பின் வங்கிக்குத் திரும்பி வரவில்லை.

இதனால் வங்கி அதிகாரிகள், கேஷியருக்கு பல முறை தொடர்பு கொண்டனர். ஆனால், அழைப்பு எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் பிரியர்தர்ஷினி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், முகேஷ் வங்கி பணத்துடன் கடத்தப்பட்டதாக ஆடியோ தகவல் பரவியது.

இதையடுத்து முகேஷை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவரது செல்போன் எண் இணைப்பை வைத்து அவர் எங்கிருக்கிறார் என தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பணப்பெட்டியுடன் முகேஷ் போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியானது.

கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்ச ரூபாயை கடன் வாங்கி முகேஷ் விளையாடியுள்ளார். இந்த விளையாட்டினால் அனைத்தையும் அவர் இழந்துள்ளார். அத்துடன் கடன் கொடுத்த கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்து கடனை அடைக்க முகேஷ் திட்டமிட்டுள்ளார். அதற்கான தன்னைப் பணத்துடன் கடத்தி விட்டதாக தகவல் பரப்பியுள்ளார். அத்துடன் வங்கி வாடிக்கையாளர்களின் பணம் 10 லட்ச ரூபாயையும் அவர் கையாடல் செய்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வங்கியில் இருந்து எடுத்துச் சென்ற ரூ.43.86 லட்சத்தில் 3 ஆயிரம் ரூபாயை செலவு செய் து விட்டதாக முகேஷ் கூறியுள்ளார். இதையடுத்து அவரிடம் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வங்கியில் இருந்து எவ்வளவு ரூபாயை முறைகேடு செய் துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வரும் என்று போலீஸார் கூறியுள்ளனர். வங்கி கேஷியரே பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in